கொடநாடு கொள்ளை-எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க அனுமதி கோரி மனு

SHARE

கொடநாடு கொள்ளை, கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் புதிதாக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில், “கொடநாடு கொள்ளை, கொலை வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி, முன்னாள் மாவட்ட ஆட்சியர் சங்கர், முன்னாள் எஸ்.பி. முரளி ரம்பா, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை விசாரிக்க வேண்டும். காணாமல் போன பொருட்கள் எவை என்பது பற்றி சசிகலா, இளவரசிக்குத்தான் தெரியும். எடப்பாடி பழனிசாமி தொடர்பு பற்றி சயான் பேசியுள்ள நிலையில், அதன் தீவிரத்தைப் பரிசீலிக்க நீலகிரி நீதிமன்றம் தவறிவிட்டது. புலன் விசாரணைக் குழு வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளவில்லை; முக்கிய குற்றவாளிகளை விட்டுவிட்டது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை விரைவில் சென்னை ஐகோர்ட்டில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


SHARE

Related posts

Leave a Comment