கொல்கத்தா மாநகராட்சி தேர்தலில் 133 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை

SHARE

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா மாநகராட்சி தேர்தல் கடந்த 19ந்தேதி நடந்து முடிந்தது.  இதில் 63% ஓட்டுகள் பதிவாகி இருந்தன.  அதன் முடிவுகளை மேற்கு வங்காள தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டு வருகிறது.
இதன்படி, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 7 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.  இதுதவிர, 108 தொகுதிகளில் முன்னிலையும் பெற்றுள்ளது.  பா.ஜ.க. 4 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.  மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மற்றும் காங்கிரஸ் 2 தொகுதிகளிலும், மற்றவை 3 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.

மொத்தம் 144 இடங்களை கொண்ட கொல்கத்தா மாநகராட்சி தேர்தலில் 133 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. 


SHARE

Related posts

Leave a Comment