பிரமாண்ட கோசி ரயில் பாலத்தை நாட்டிற்கு அர்பணித்தார் பிரதமர் மோடி

SHARE

பீஹாரில் வரலாற்று சிறப்புமிக்க கோசி ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டிற்கு அர்பணித்தார்

பீஹாரில் கோசி ஆற்றுக்கு குறுக்கே பிரமாண்ட ரயில் பாலம் கட்டும் திட்டத்திற்கு 2003 – 2004 ஆண்டில் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. 516 கோடி ரூபாய் மதிப்பில் 1.9 கி.மீ. நீளத்திற்கு திட்டமிடப்பட்டிருந்த இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் முடிவடைந்துள்ளன. இந்நிலையில் இந்த கோசி ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

வடகிழக்கு மாநிலங்களை இணைக்கும் இந்த பாலம் திறக்கப்படுவது பீஹார் வரலாற்றில் சிறப்புமிக்க தருணமாகும். இதன்மூலம் பீகார் மக்களின் 86 ஆண்டு கனவு நிறைவேற உள்ளது. பிராந்திய மக்களின் காத்திருப்புக்கு பலன் கிடைக்க உள்ளது. இந்த திட்டத்துடன் மேலும் 12 ரயில் திட்டங்களையும் பிரதமர் அறிமுகம் செய்தார்.

பீஹாரில் அக்டோபர் – நவம்பர் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் மாநிலத்தில் கடந்த சில நாட்களில் 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே,அரசு பணத்தை செலவு செய்து பீகார் தேர்தலில் எப்படியும் வெற்றி பெரும் முயற்சியில் பாஜக களம் இறங்கியுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

நாடு முழுவதும் வசூலாகும் ஜிஎஸ்டி வருவாயை தேர்தல் நெருங்கி வரும் மாநிலங்களில் வாரி இறைப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


SHARE

Related posts

Leave a Comment