கண்டெய்னர் லாரியில் மோதிய குஷ்பு கார் – வேல் யாத்திரைக்கு சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்

SHARE

குஷ்பு தன்னுடைய காரில் வேல் யாத்திரைக்காக கடலூர் நோக்கி மதுராந்தகம் அருகே  சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னாள் சென்ற கண்டெய்னர் லாரி மீது குஷ்பு சென்ற கார் திடீரென மோதியது. இதில் காரின் பின்பக்க கதவு மட்டும் சேதம் அடைந்துள்ளதாகவும், குஷ்புக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு கண்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் கார் மட்டுமே சேதம் அடைந்தது. யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்றார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


SHARE

Related posts

Leave a Comment