துரைமுருகன் தேர்தலில் போட்டியிட எதிர்ப்பு? தலைமைக்கு கடிதம்

SHARE

‘உடல் நலத்தை கருத்தில் கொண்டு, வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன், மீண்டும் காட்பாடி தொகுதியில் போட்டியிடாமல், இளைஞர்களுக்கு வழி விட வேண்டும்’ என, வேலுார் மாவட்ட தி.மு.க.,வினர் சிலர் கடிதம் வாயிலாக, கட்சி மேலிடத்திற்கு வலியுறுத்தி உள்ளனர்.

துரைமுருகனுக்கு, வயதாகி விட்டது. அவரது மகன் கதிர்ஆனந்த் வேலுார் தொகுதி எம்.பி.,யாக உள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக, அடிக்கடி துரைமுருகன் மருத்துவமனையில், ‘அட்மிட்’ ஆகி, பரிசோதனை செய்து வருகிறார். அவரது உடல் நலத்தை கருத்தில் கொண்டு, வீட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டு, கட்சிக்கு ஆலோசனைகளை வழங்கி வரலாம். தேர்தலில் போட்டியிட்டால், அவர் பிரசாரத்திற்கு செல்வது கஷ்டமாக இருக்கும்.


எனவே, இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில், தேர்தலில் போட்டியிடாமல் துரைமுருகன், கட்சி பணிகளை மட்டும் ஈடுபட வேண்டும். அது தான் அவரது உடல் நலத்திற்கு உகந்தது. இது தொடர்பாக, வேலுார் மாவட்ட நிர்வாகிகள், சிலர் கட்சி மேலிடத்திற்கு கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளனர்.


SHARE

Related posts

Leave a Comment