உலகின் அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்த இளம் வயது பெண் என அமெரிக்காவை சேர்ந்த 23 வயது லெக்சி அல்ஃபோர்ட் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

இவர் தனது 18 வயதிலேயே 70-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். பின்னர் 21 வயதுக்குள் உலகில் உள்ள 195 நாடுகளுக்கும் பயணம் செய்துள்ளார்.

இவரது இந்த சாதனை தற்போது கின்னஸ் புக் ஆப் ரெக்கார்ட்சில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
18 வயது நிரம்பும் முன்னரே இவர் தனது பெற்றோருடன் பயணம் செய்த போது அனைத்து நாடுகளுக்கும் செல்ல வேண்டும என்ற ஆர்வம் பிறந்ததாக அவர் பதிவிட்டுள்ளார்.

இந்த பயனத்திற்கு இந்திய ரூபாய் மதிப்பில் கணக்கிட்டால் அவர் 1.5 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளார்