வங்கக்கடலில் உருவாகியுள்ள, ‘நிவர்’ புயல், அதி தீவிரமாக உருவெடுத்து இன்று நவம்பர் 25ம் தேதி இரவு, காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்க உள்ளது.
“கஜா’வுக்கு அடுத்து இப்போது நிவர்’:
2004க்கு முன் புயலுக்கு பெயர் வழக்கம் நடைமுறை இல்லை.எந்த ஆண்டு என்பது தான் பதிவில் இருக்கும்.
* 1994 அக்டேபர் 31 – வங்கக்கடலில் உருவான அதிதீவிர புயல், சென்னைக்கு அருகே, 130 கி.மீ., வேகத்தில் கரையைக் கடந்தது. இதனை தொடர்ந்து பெய்த கன மழைக்கு, 60 பேர் பலியாகினர்.
* 2008 நவ., 26ல் ‘நிஷா’ புயல், நாகபட்டினம் – காரைக்கால் இடையே மணிக்கு, 80 கி.மீ., வேகத்தில் கரையைக் கடந்தது.இது சாதாரண புயலாக தான் இருந்தது.
* 2010 நவ., 1: ‘ஜல்’ புயல், சென்னை அருகே மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் கரையைக் கடந்தது; பெரிய அளவில் எந்த பாதிப்பு இல்லை.
* 2011 டிச.,: ‘தானே’ புயல் புதுச்சேரி – கடலுார் இடையே மணிக்கு, 135 கி.மீ., வேகத்தில் கரையைக் கடந்தது. பயிர்கள், மரங்கள், மின்கம்பங்கள் நாசமாகின.விவசாயிகள் பெரும் சேதத்தை சந்தித்தனர்.
அடுத்த ஆண்டே நீலம் புயல்
* 2012 அக்டோபர் 31: ‘நீலம்’ புயல் மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது; 85 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது
2016ல் லிருந்து வருடம் தோறும் புயல்.
* 2016 டிசம்பர் 12: ‘வர்தா’ புயல் அதி தீவிர புயலாக மாறி, சென்னை அருகே கரையைக் கடந்தது. 130 கி.மீ., மேல் காற்று வீசியது; 10 பேர் பலியாகினர்; 10 ஆயிரம் மின் கம்பங்கள்சேதமடைந்தன
* 2017 நவம்பர் 30: அரபிக்கடலில் உருவான, ‘ஒக்கி’ புயலால் ஏற்பட்ட கன மழையால், தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த சேதம் ஏற்பட்டது
* 2018 நவம்பர் 18: ‘கஜா’ புயல் வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. மணிக்கு, 110 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது. டெல்டா மாவட்டங்களில் பெரிதும் பாதிக்கப்பட்டன.விவசாயிகள் பெரிய அழிவை சந்தித்தனர்
* 2020 நவம்பர் 25: வங்கக்கடலில் உருவாகியுள்ள, ‘நிவர்’ புயல், காரைக்கால் – மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.2008ம் ஆண்டிற்கு பிறகு,மீண்டும் மாமல்லபுரத்தில் கரையை கடக்கிறது புயல்.அப்போது 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதில் பாதிப்புகள் அதிகம் இல்லை.ஆனால் தற்போது 120 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால்இமக்களிடையே அச்சம் நிலவுகிறது,