8 லட்சம் வருமான உச்சவரம்பு- மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

SHARE

மருத்துவ படிப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீடுக்கு வருமான உச்ச வரம்பாக 8 லட்ச ரூபாய் நிர்ணயித்துள்ளது பற்றி மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.

‘மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ‘நீட்’ தேர்வு அடிப்படையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு 10 சதவீதமும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீதமும் வழங்கப்படும்’ என மத்திய அரசு அறிவித்தது. மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கான வருமான உச்ச வரம்பாக ஆண்டுக்கு 8 லட்ச ரூபாய் என மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.

மத்திய அரசின் இடஒதுக்கீடு அறிவிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பலர் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.இந்த வழக்கு நீதிபதிகள் சந்திரசூட், நாகரத்னா, விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் ‘மருத்துவ படிப்பு இடஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்டோருக்கான வருமான உச்ச வரம்பு ஆண்டுக்கு 8 லட்ச ரூபாயாக நிர்ணயித்துள்ளது பற்றி மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம் விளக்கம் அளிக்க வேண்டும்’ எந்த அடிப்படையில் இந்த தொகை நிர்ணயிக்கப்பட்டது என்பது குறைத்து விரிவான தகவலை தரவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


SHARE

Related posts

Leave a Comment