சென்னைக்கு கிழக்கு தென் கிழக்கே சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டிருந்த தாழ்வு மண்டலம் . மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கரையை கடந்தது.
தாழ்வு மண்டலத்தால் சென்னையில் 15 மணிநேரத்திற்கும் மேலாக பெய்து கொண்டிருக்கும் கனமழையால் பல்வேறு சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. சென்னை மாநகராட்சியின் சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. பல சாலைகளிலும் போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது. தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒருசில இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கபட்டுள்ளது.
இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி வடசென்னை-ஸ்ரீஹரிகோட்டா பகுதியில் கரையை கடந்தது என்ற மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது