மிரட்டிய மதுவந்தி பணிந்தார்.

SHARE

வங்கியில் விட்டு கடன் வாங்கி செலுத்தாமல் இருந்து வந்த பாஜக பிரமுகர் மதுவந்தி அதிகாரிகள் சீல் வைக்க வந்ததால் பதறினார்.

மத்தியில் ஆளும் பாஜக ஆதரவாளரான மது வந்தி தன்னை தீவிர மோடி ஆதரவாளராக காட்டி கொண்டார்.ஜாதி ரீதியிலான சர்ச்சைக்குறிய கருத்துகளை தெரிவித்ததால் அவர் பலரின் கண்டனத்திற்கு ஆளானார்.

இந்நிலையில் மத்திய அரசின் பெயரை சொல்லி வங்கி கடன்களை சரிவர செலுத்தாமல் வங்கி அதிகாரிகளை அவர் மிரட்டி வந்ததாக தகவல் பரவியது.

இந்த நிலையில் அவர் வாங்கிய வீடு ஒன்றுக்கான கடன் தொகையை அவர் செலுத்தாததால் அந்த வீட்டை அதிகாரிகள் சீல் வைக்க வந்தனர். இதனால் பதறிய மதுவந்தி அதிகாரிகளை மிரட்டும் தொனியில் பேசிப்பார்த்தார்.

அவர்கள் அதை பற்றி கண்டுகொள்ளாதததால் அவர்களை கெஞ்ச துவங்கினார்.முதலில் மிரட்டும் தொனியில் அவர் பேசியதால் வங்கி அதிகாரிகள் அவர் பேச்சை வீடியோ எடுக்க துவங்கியதும் மதுவந்தி சுதாரித்துகொண்டு கெஞ்ச துவங்கியதாக சீல்வைக்க சென்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.


SHARE

Related posts

Leave a Comment