“நேசன் வான்ட் டு நோ” அர்னாபுக்கு அடுத்த செக்

SHARE

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை தொடர்பாக, ‘ரிபப்ளிக் டிவி’ என்ற ஆங்கில செய்தி சேனலில் செய்தி வெளியிடப்பட்டது.
அதில், மஹாராஷ்டிரா முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே குறித்து சில கருத்துக்களை, அந்த சேனலின் தலைமை செய்தி ஆசிரியரான அர்னாப் கோஸ்வாமி வெளியிட்டார்.
இதையடுத்து அவருக்கு, மஹாராஷ்டிரா சட்டசபை, உரிமை மீறல் விளக்க ‘நோட்டீஸ்’ அனுப்பியுள்ளது. இதை எதிர்த்து, அர்னாப் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
‘மஹாராஷ்டிரா சட்டசபை, விளக்க நோட்டீஸ் மட்டுமே அனுப்பியுள்ளது. அதன் மீது ஏதாவது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, நீதிமன்றம் தலையிட முடியும்.

அதனால், எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது’ என, தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு தெரிவித்தது.


SHARE

Related posts

Leave a Comment