மராட்டியத்தில் கட்டுப்படாத கொரோனா-இன்று 22,543 பேருக்கு பாதிப்பு. ஆந்திராவிலும் அதிகரிப்பு

SHARE

நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மராட்டியம் முதலிடத்தில் உள்ளது.
அந்த மாநிலத்தில் இன்று புதிதாக 22,543 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 416 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மராட்டியத்தில் மேலும் 22,543 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,60,308 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் மாநிலத்தில் 416 பேர் கொரோனாவால் பலியானதை தொடர்ந்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 29,531 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் 11,549 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து இதுவரை 7,40,061 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 2,90,344 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதே போல .ஆந்திராவில் மேலும் 9,536 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.கர்நாடகாவில் மேலும் 9,894 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன்படி இன்று மேலும் 3,139 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


SHARE

Related posts

Leave a Comment