சீன கப்பல்கள், விமானங்கள் மலேசிய கடல் எல்லைக்குள் அத்துமீறல்

SHARE

தெற்காசிய நாடான மலேசியாவுடன் கடல் மற்றும் வான் எல்லையில் மோதல் போக்கில் சீனா ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சீன கப்பல்கள் சர்வதேச எல்லையைத் தாண்டி மலேசிய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக மலேசிய வெளியுறவுத்துறை அமைச்சர்குற்றம்சாட்டியுள்ளார்.

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் அவ்வப்போது சீனா அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக தென் கொரியா, தைவான், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளுடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறது.கடல் எல்லையில் சர்வதேச சட்டத்தைப் பின்பற்றாமல் அவ்வப்போது சீன கடற்படை மற்றும் எண்ணெய் கப்பல்கள் ஆகியவை அத்துமீறி நடந்து கொள்வது அண்டை நாடுகளை அச்சுறுத்தி வருகின்றன.இதில் ஐநா தலையிட்டு சீனாவுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும் என கூறப்படும் நிலையில் அவ்வப்போது அமெரிக்கா இதில் தலையிடுவது சீனாவை அதிர்ச்சி அடையச் செய்கிறது.

கடல் எல்லையில் சீனாவின் அத்துமீறலும் ஒரு பக்கம் இருக்கும் நிலையில் வான் எல்லையிலும் அவ்வப்போது சீனா அத்துமீறலில் ஈடுபடுவது வாடிக்கையாகிவிட்டது. சீனாவின் 16 போர் விமானங்கள் மலேசியா வான் எல்லைக்குள் தற்போது நுழைந்துள்ளன. இதுகுறித்து சீனாவிடம் விளக்கம் கேட்டபோது சீன விமானப்படை வழக்கம்போல பயிற்சி மேற்கொள்வதற்காக பறந்ததாகத் தெரிவித்துள்ளது.

மேலும் சர்வதேச வான் எல்லைக்குள் நுழைய சீன போர் விமானங்களுக்கு அனுமதி உண்டு என சீன ராணுவம் தெரிவிக்கிறது. போர்னோ பகுதியில் இந்த அத்துமீறல் நடைபெற்றுள்ள நிலையில் மலேசிய வெளியுறவு துறை அமைச்சர் ஹிஜாமுதீன் உசைன் மலேசியாவில் உள்ள சீன தூதரகத்துக்கு இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மலேசியா மட்டுமல்லாமல் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள வியட்நாம், பிலிப்பைன்ஸ், புரூனே உள்ளிட்ட பல நாடுகளுடன் இதேபோல சீனா மோதலில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


SHARE

Related posts

Leave a Comment