மலேஷிய பிரதமர் ராஜினாமா

SHARE

மலேஷியாவில், 2020ல் பிரதமர் மஹதிர் தலைமையிலான ஆட்சியை கவிழ்த்து, கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் முஹைதீன் யாஷின் பிரதமரானார். நிர்வாகத் திறனற்ற இவரது ஆட்சிக்கு எதிராக கூட்டணி கட்சிகளே குற்றஞ்சாட்டின. ஏழு மாதங்களாக ஊரடங்கை நீட்டித்தும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாமல் மலேஷிய அரசு திணறி வருகிறது. இந்நிலையில் அரசுக்கு அளித்த வந்த ஆதரவை ஐக்கிய மலாய் தேசிய கட்சி வாபஸ் பெற்றது. இக்கட்சியை சேர்ந்த இரு அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

தொடர்பாக யாஷின் நடத்திய சமரச பேச்சும் தோல்வி அடைந்தது. இந்நிலையில் மலேஷிய மன்னர் சுல்தான் அப்துல்லாவை, யாஷின் நேற்று சந்தித்து பார்லி.,யில் பெரும்பான்மையை இழந்து விட்டதால், பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட மன்னர் புதிய அரசு அமையும் வரை பிரதமர் பொறுப்பில் நீடிக்கும்படி வலியுறுத்தினார். இதையடுத்து முஹைதீன் யாஷின் நாட்டு மக்களுக்கு ‘டிவி’யில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் நாடாளுமனறத்தில் பெரும்பான்மை ஆதரவு இல்லாததால் ராஜினாமா செய்துள்ளேன். என் ஆட்சியில் செய்த அனைத்து தவறுகளையும் மன்னிக்க வேண்டும்.

கொரோனாவில் இருந்து மக்களை காக்க அரசு பெருமுயற்சி செய்தது. தடுப்பூசி திட்டம் முடிவடைந்து, நாட்டின் பொருளாதாரத்தை மீட்சி அடையச் செய்த பின், பதவி விலக நினைத்திருந்தேன்.ஆனால் அதிகாரப் பசி உடையவர்கள் துரோகம் செய்ததால் பதவி விலகுகிறேன். நானும் தவறுகள் செய்யும் சாதாரண மனிதன் தான். எனவே என் தவறுகளை மன்னிக்கும்படி வேண்டுகிறேன் என அவர் பேச்சில் குறிப்பிட்டார்.


SHARE

Related posts

Leave a Comment