பாராலிம்பிக்’ எனப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில், உயரம் தாண்டுதலில், தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, வெள்ளி வென்றார். மாரியப்பனுக்கு, தமிழக அரசு சார்பில், இரண்டு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும்,” என, முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.
மாரியப்பனுக்கு வாழ்த்து தெரிவித்து, முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில், பாராம்லிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு வாழ்த்துக்கள், சளைக்காத தன் திறமையால் வெள்ளி வென்றுள்ளார் மாரியப்பன். இளைஞர்களிடம் ஊக்கத்தை விதைக்கும் வகையில் விருதுகளை வென்ற மாரியப்பனுக்கு ரூ. 2 கோடி ஊக்கப்பரிசு வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.