மதுரா – பிருந்தாவனத்தில் இறைச்சி, மது விற்க தடை

SHARE

உத்தர பிரதேச மாநிலம், மதுரா – பிருந்தாவனம் மாநகராட்சி பகுதியை சுற்றி, 10 கி.மீ., துாரத்துக்கு மது, இறைச்சி விற்க, மாநில அரசு தடை விதித்துள்ளது.

உ.பி.,யின் மதுரா மாவட்டம், மதுரா பிருந்தாவனம் பகுதி பகவான் கிருஷ்ணரின் ஜன்மபூமியாக கருதப்படுகிறது. தனித்தனி மாநகராட்சிகளாக இருந்த மதுராவும், பிருந்தாவனமும் மக்களின் கோரிக்கையை ஏற்று மதுரா – பிருந்தாவன் என ஒரே மாநகராட்சியாக 2017ல் இணைக்கப்பட்டது.

கிருஷ்ண ஜெயந்தி விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மதுராவுக்கு சென்று கிருஷ்ண ஜன்மபூமியில் வழிபட்ட முதல்வர் யோகி ஆதித்யநாத், மதுராவில் மது, இறைச்சி விற்க உடனடியாக தடை விதிக்கப்படுவதாக அறிவித்தார்.

இந்நிலையில் உ.பி., அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் : கிருஷ்ண ஜன்மபூமியான மதுரா – பிருந்தாவனத்தின் புனிதத்தை கருதி அப்பகுதியை சுற்றி, 10 கி.மீ., துாரத்துக்கு இறைச்சி, மது விற்க தடை விதிக்கப்படுகிறது. இந்த தடையை முழுமையாக அமல்படுத்த மதுரா மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியை சேர்ந்த மது, இறைச்சி வியாபாரிகளுக்கு வேறு தொழில் ஏற்படுத்தி கொடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


SHARE

Related posts

Leave a Comment