கடந்த மே19, மே 20 ஆகிய தேதிகளில் ஐசிஎம்ஆரில் 4 ஆயிரம் பேருக்கு தவறாக கொரோனா இருப்பதாக பதிவேற்றம் செய்திருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் 4 ஆயிரம் பேருக்கு தவறாக கொரோனா இருப்பதாக கூறியதாக புகார் அடிப்படையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஐசிஎம்ஆர் பதிவேட்டில் மெட்ஆல் மேற்காட்டிய இரண்டு நாட்களிலும் 4 ஆயிரம் பேருக்கு கொரோனா நெகட்டிவ் என வந்ததை பாசிட்டி என காட்டி, இந்திய அளவில் தமிழகத்தின் கொரோனா எண்ணிக்கையை அதிகரித்து காட்டியதாக வந்த புகார் அடிப்படையில் அரசு உரிமத்தை ரத்து செய்துள்ளது.
மேலும் கோல்கட்டாவில் கொரோனா பாசிட்டிவாக இருந்தவர்களை கள்ளக்குறிச்சியை சேர்ந்தவராக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மெட் ஆல் கொரோனா பரிசோதனை உரிமத்தை தமிழக சுகாதாரத்துறை ரத்து செய்தது.
இந்த நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.