மேகாலயா -12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் திரிணாமுல் காங்கிரஸ் தாவல்

SHARE

மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் முதல் மந்திரியாக கான்ரட் கொங்கல் சங்மா செயல்பட்டு வருகிறார்.
இதற்கிடையில், மேகாலயாவில் பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியில் மொத்தம் 17 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதில், முன்னாள் முதல்-மந்திரியான முகுல் சங்மாவும் அடக்கம்.

இந்நிலையில், மேகாலயாவில் மொத்தமுள்ள 17 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 12 பேர் திடீரென திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தாவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்-மந்திரியான முகுல் சங்மா உள்பட 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நேற்று இரவோடு இரவாக காங்கிரசில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரசில் இணைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 
மேற்குவங்காளத்தில் ஆட்சி செய்து வரும் திரிணாமுல் காங்கிரசின் அரசியல் வட்டத்தை விரிவு படுத்தும் நோக்கத்தோடு அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் இரவோடு இரவாக 17 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 12 பேர் திரிணாமுல் காங்கிரசில்இணைந்ததாக வெளியாகியுள்ள தகவல் மேகாலய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 


SHARE

Related posts

Leave a Comment