பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை, மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக, அவர் ஒருவருக்காக மட்டும் சிறப்பு ரயிலை இயக்கிய ஐதராபாத், ‘மெட்ரோ’ ரயில் நிர்வாகத்துக்கு பாராட்டுகள் குவிகிறது.
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில், 13 மற்றும் 14ம் தேதிகளில் கன மழை பெய்தது; நகரமே வெள்ளக்காடாக மாறியதால், சாலை போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது.இந்த நிலையில், 14ம் தேதி இரவு, 10:00 மணிக்கு, கர்ப்பிணி ஒருவர், விக்டோரியா மெமோரியல் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வந்தார்.
பிரசவ வலியால் துடித்த அவர், மியாபூர் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்றார். வழக்கமாக இரவு, 9:00 மணியுடன், மெட்ரோ ரயில் சேவை முடிவடையும்.கர்ப்பிணியின் நிலையை கருத்தில் கொண்டு உயர் அதிகாரிகளுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.அவர்கள் உடனடியாக அனுமதியளிக்க, கற்பினி பெண் ஒருவருக்காக மட்டும், சிறப்பு ரயிலை மெட்ரோ நிர்வாகம் இயக்கியது. இந்த செயல், பல்வேறு தரப்பிலும் பாராட்டுகளை குவித்து வருகிறது.