கடற்கரையில் போதைப்பொருள் கும்பல் இடையே துப்பாக்கி சண்டை – சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம்

SHARE

போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் அதிக அளவில் செயல்பட்டு வருகிரும் நாடு மெக்சிகோ. இதனால், போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே அவ்வப்போது மோதல்களும் அரங்கேறி வருகிறது.
அந்நாட்டின் கன்குன் நகரில் பஹிமா பெடம்பிட்ச் என்ற கடற்கரை அமைந்துள்ளது. மிகவும் பிரபலமான இந்த கடற்கரை பகுதியில் நேற்று நூற்றுக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அப்போது, அங்கு வந்திருந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலின் போது இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர்.
கடற்கரை அருகே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் அங்கு கூடியிருந்த சுற்றுலா பயணிகள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் வருவதற்கு முன்னர் மோதலில் ஈடுபட்ட போதைபொருள் கடத்தல் கும்பல் கடற்கரை பகுதியில் இருந்து உடனடியாக தப்பியோடிவிட்டது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் கடற்கரையில் இருந்து சுற்றுலா பயணிகள் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்ற போதிலும் சினிமா கட்சிகளை விஞ்சும் இந்த துப்பாக்கி சண்டை காட்சிகள் அங்கிருந்தவர்களை பதட்டத்தில் ஆழ்த்தியது.


SHARE

Related posts

Leave a Comment