2021ம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் 25 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸ்வர்தன் தெரிவித்துள்ளார்.
2021ம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் 20 முதல் 25 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்காக 400 – 500 மில்லியன் டோஸ் மருந்துகளை வாங்கி பயன்படுத்துவதற்கு மனித வளத்தை கட்டமைக்கவும், பயிற்சி, கண்காணிப்பு ஆகியவற்றை அளிக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
தடுப்பூசி தயாரானதும், அதனை நேர்மையாகவும், சமமாகவும் விநியோகிப்பதை உறுதி செய்ய மத்திய அரசு 24 மணி நேரமும் உழைத்து வருகிறது. நாட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்வதே மத்திய அரசின் முன்னுரிமையாகும். கொரோனாவிற்கு எதிராக முன்களப்பணியாற்றும் சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடைப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அவர் கூறினார்.