தமிழகத்தில் படிப்படியாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழகத்தில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையை விட குணமடைவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தினசரி கொரோனா பாதிப்பை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகள் இல்லை என்ற நிலை விரைவில் உருவாகும் என்றார்.
மேலும் பாரபட்சமின்றி அனைத்து மாவட்டங்களுக்கு சம உரிமையோடு தடுப்பூசி வழங்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்