சேற்றில் சிக்கிய அமைச்சர்-சிறப்பு செய்தி

SHARE

பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் மலை கிராம மக்கள் பட்ட கஷ்டங்களை அமைச்சரும் அனுபவிக்கும் வகையில் செய்துள்ளது இயற்கை.

வேலூர்மாவட்டம்,ஜவ்வாது மலைதொடர்களில் உள்ளது பீஞ்சமந்தை

இங்கு இயற்கையுடன் வாழும் மலைகிராம மக்கள் தங்களுக்கு சாலை வசதி வேண்டி சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து போராடி வருகின்றனர்

ஆனால் யாரும் அவர்களின் கோரிக்கையை நிறைவேற வில்லை

இந்த நிலையில் தான் அங்கு நடைபெற்ற அரசு நிகழ்ச்சிக்கு அமைச்சர் வீரமணி மாவட்ட ஆட்சியர் தொகுதி எம்பி எம்எல்ஏ என ஒரு படையே சென்றது.

அங்கேயும் அமைச்சரிடம் சாலை வசதி வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டது.

நிகழ்ச்சி முடிந்த பின்னர் அனைவரும் ஊர் திரும்ப கிளம்பினர்…தட்டிகிளப்பியது மழை

மண்சாலையான மலை பாதை சேரும் சகதியுமானது எப்போதும் போல ஜிவ் என்றுகிளம்பிய அமைச்சரின் கார் சேற்றில் சிக்கியது

 அந்த மலைகிராம மக்கள் காலம் காலமாக பட்ட கஷ்ட்டத்தை அமைச்சருக்கு உணர்த்தியது இயற்கை ….

சேறு சகதியில் அமைச்சர் வீரமணி நடந்தே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது..

அந்த மலை கிராம மக்கள் அமைச்சரின் காரை தங்களின் ட்ராக்ட்டரை கொண்டு இழுத்து மீட்டனர்.


SHARE

Related posts

Leave a Comment