தி.மு.க. அரசை விமர்சிக்க யாருக்கும் தகுதி இல்லை – மு.க.ஸ்டாலின்

SHARE

ஓராண்டில் ஓராயிரம் நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். தி.மு.க. அரசை விமர்சிக்க யாருக்கும் தகுதி இல்லை என கோவையில் நடந்த அரசு நலத்திட்ட விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக கோவை சென்றார். நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கோவை மாவட்டத்தில் நிறைவு பெற்ற வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் புதிய பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா ஆகியவை ஈச்சனாரி பகுதியில் நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்துகொள்ள சென்ற முதலமைச்சருக்கு, திரளான ஆண்கள், பெண்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தனியார் கல்லூரி மாணவிகள் பெருமளவில் திரண்டு வந்து முதல்-அமைச்சரை வரவேற்றனர். அவர்களை பார்த்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது வாகனத்தில் இருந்து இறங்கி அவர்களுடன் கலந்துரையாடினார்.

பின்னர், சிறிது தூரம் நடந்து சென்றார். ரூ.663 கோடி புதிய திட்டங்கள் Also Read – கஞ்சா விற்ற 5 பேர் கைது இதையடுத்து அங்கிருந்து வாகனம் மூலம் புறப்பட்டு விழா அரங்கிற்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு வைக்கப்பட்டு இருந்த அரசு துறைகளின் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.

விழாவில் ரூ.663 கோடி செலவில் 748 புதிய திட்டங்களுக்கு முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.272 கோடி மதிப்பில் 229 முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 410 பேருக்கு ரூ.588 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்து இந்த 15 மாதங்களில் கோவை மாவட்டத்திற்கு ஐந்தாவது முறையாக வந்திருக்கிறேன். இந்த மாவட்டத்தின் மீதும் இந்த மாவட்ட மக்கள் மீதும் நான் வைத்திருக்கக்கூடிய அன்பின் அடையாளம் இது என்றார்.

தென்னிந்தியாவின் மிக முக்கியமான தொழில் நகரம் கோவை. பெருந் தொழில் மட்டுமல்ல சிறு, குறு, நடுத்தர தொழில் அதிகம் நிறைந்த நகரம். தமிழ்நாட்டுக்கே ஏற்றுமதி, இறக்குமதி குறியீடுகளை வளமாக வழங்கக்கூடிய மாவட்டமாக இந்த மாவட்டம் அமைந்துள்ளது. எனவே இங்கு இந்த விழா நடைபெறுவது மிகப்பொருத்தமானது. கணக்கு காட்டும் அரசு அல்ல இந்த அரசு மக்களுக்கான அரசாக உள்ளது. பல சாதனைகளை செய்து கொண்டிருக்கிறது. ஏதோ சிலருக்கு உதவிகளை செய்துவிட்டு கணக்கு. காட்டுபவர்கள் அல்ல நாங்கள். கணக்கிட முடியாத நலத்திட்ட உதவிகளை செய்யும் அரசு தான் தி.மு.க. அரசு என்று கம்பீரமாக சொல்வேன். கோவை பன்னாட்டு விமான நிலைய விரிவாக்க திட்ட பணிகளுக்கு 1810 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிக முதலீடுகளை ஈர்த்து, அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கி கடந்த ஓராண்டு காலமாக தமிழ்நாடு முன்னேறி வருகிறது. அண்மையில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகியோரை சந்திக்க டெல்லி சென்று இருந்தேன். அப்போது என்னை சந்தித்தவர்கள் தமிழ்நாட்டை பற்றியும், அதன் வளர்ச்சியை பற்றியும் கேட்டார்கள். அவர்கள் கேட்ட கேள்வியை பார்த்து ஒரு உயர்ந்த கருத்து பரவலாக இருப்பதை நான் உணர்ந்தேன். Also Read – வளர்ச்சியை மேம்படுத்த சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிக வாய்ப்புகள் அது ஒரு நாளிலோ, அல்லது ஒரு மாதத்திலோ பெற்றதல்ல. தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் அளித்துச்சென்ற அடித்தளத்தில், கலைஞர் வகுத்து தந்த பாதையில், தி.மு.க. ஆட்சி செல்வதால் பெற்றிருக்க கூடிய நற்பெயர் இது. மக்களிடம் கேளுங்கள் பல்வேறு மாநில அரசுகளும் தமிழ்நாட்டின் திட்டங்களை உன்னிப்பாக கவனித்து தங்களுடைய மாநிலத்தில் இதை பின்பற்றி வருகிறார்கள். ஆனால் இங்கே இருக்கக்கூடிய சிலரால் இதனை தாங்கிக் கொள்ள முடியவில்லை. தி.மு.க அரசு எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என சிலர் பொத்தாம் பொதுவாக சொல்லிக்கொண்டிருகிறார்கள். அவர்களிடம் நான் கேட்பதெல்லாம், எங்கள் ஆட்சியால் பயனடைந்த மக்களிம் வந்து கேளுங்கள். ஏதோ பேட்டி கொடுப்பதற்காக மட்டும் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டு, வீட்டுக்குள் உட்கார்ந்து கொள்பவர்களுக்கு புரிந்து கொள்ள முடியாது.

தமிழ்நாட்டு மக்கள் அடையும் நன்மைகளை நீங்கள் தெரிந்துகொள்ள முடியாது. மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து, மக்களை தேடி மருத்துவம், ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு, உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டம் இதுபோல எண்ணற்ற திட்டங்களை ஏற்றுக்கொள்ள, புரிந்து கொள்ள மனமில்லாமல் பேட்டி அளித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நான் எப்போதும் முக்கியம் தருவதில்லை.

அனைவருக்கு மான அரசு தன்மானம் இல்லாத, இனமானம் என்றால் என்னவென்றே தெரியாத கூட்டம்தான் இன்று தி.மு.க. ஆட்சியை பார்த்து விமர்சிக்கிறது. தி.மு.க. ஆட்சி என்பது ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஒளிதரும் ஆட்சி. ஒரு தாய் தனது எல்லா குழந்தைகளையும் ஒரே மாதிரி வாழ்விப்பதைபோல், தி.மு.க. அரசு அனைவருக்குமான அரசாக செயல்படுகிறது. ங

அனைத்து தொகுதிகளிலும் மக்களுக்கு தேவையான நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள, நீண்ட காலமாக செயல்படுத்த முடியாத 10 முக்கியமான கோரிக்கைகளை அரசுக்கு வழங்குமாறு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் எழுதியிருக்கிறேன். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத முன்னோடி திட்டம் இது. தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமல்ல எங்கள் கூட்டணியில் இடம்பெறக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் அல்ல. அ.தி.மு.க. சார்ந்தவராக இருந்தாலும், பா.ஜ.க.வில் உள்ளவர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் சேர்த்து தான் அந்த தொகுதிகளும் பயனடைவதற்குதான் இந்த திட்டம். சிலர் காழ்ப்புணர்ச்சியோடு தூற்றுகிறார்கள். பரவாயில்லை. அவர்களும் பிழைக்க வேண்டும் என்று எண்ணிக்கொள்கிறேன்

. நமது அரசின் திட்டங்களால் பயனடைந்து வரும் மக்களின் பாராட்டு எனக்குப்போதும். அனுமதிக்க மாட்டேன் நமது கொள்கைகளும், கோட்பாடுகளும் நிறைவேறக்கூடாது என்று நினைப்பவர்கள்தான் என்னை விமர்சிக்கிறார்கள். தனிப்பட்ட விமர்சனங்களை பற்றி நான் கவலைப்படவில்லை. ஏனென்றால் நான் விமர்சனங்களால் வளர்ந்தவன். எதிர்ப்பையும், அடக்குமுறைகளையும் மீறி வளர்ந்தவன் நான். என்னை யாராவது எதிர்த்தால்தான் உற்சாகமாக செயல்படுவேன். என்னை எதிர்ப்பதன் மூலம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் குந்தகம் விளைவிக்க நினைத்தால் நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். விமர்சனங்களை விரும்புபவன் நான், ஆனால் விதண்டாவாதங்களை அல்ல. வழிகாட்டுதல்களை ஏற்றுக்கொள்பவன் நான். சொந்த கட்சிக்குள் அதிகார போட்டி சொந்த கட்சிக்குள் நடக்கும் அதிகார போட்டியில் தங்களது கையாலாகாத்தனத்தை மறைப்பதற்கு, திசை திருப்புகிற நோக்கத்தோடு தி.மு.க. அரசை விமர்சித்துக்கொண்டிருக்கிறார்கள். தி.மு.க. அரசை விமர்சிப்பதற்கு தகுதி கிடையாது என்பதை நான் அழுத்தந்திருத்தமாக தெரிவிக்க விரும்புகிறேன். ஓராண்டு காலத்திலேயே ஓராயிரம் திட்டங்கள். ஓராண்டு காலத்திலேயே இவ்வளவு திட்டம் என்றால் 5 ஆண்டில் அளப்பரிய திட்டங்களை நிறைவேற்றி இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகவும், உலகில் அனைத்து வளம் கொண்ட மாநிலமாகவும் ஆக்குவதே எங்களுடைய லட்சியம். இது உங்களுக்கான அரசு. உரிமையுடன் கோரிக்கை வையுங்கள் உண்மையாக நிறைவேற்றித் தருகிறோம். இந்த ஆட்சிக்கு நீங்கள் பக்கபலமாக இருக்க வேண்டும் என்றார்


SHARE

Related posts

Leave a Comment