மாநில உரிமைக்கு எதிரானது புதிய கல்விக்கொள்கை என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
புதிய கல்விக்கொள்கை தொடர்பாக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.அப்போது, புதிய கல்விக்கொள்கை மாநில உரிமைக்கு எதிரானது என்றார். இக்கொள்கை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். சமூக நீதி, கூட்டாட்சி தத்துவம், சமத்துவம், தமிழ்மொழிக்கும் எதிரானது. தேசியகல்வி கொள்கையை முழுமையாக எதிர்க்க வேண்டும். குலக்கல்வி திட்டத்தின் மறுஉருவம் இந்த புதிய கல்விக்கொள்கை எனவும் அவர் விமர்சித்தார்