வெண்கல பாத்திரத்தில் வெந்நீர் நிரப்பி, ‘அயர்ன்’ – மோடி 70 சுவாரஸ்ய தகவல்கள்.

SHARE

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 70வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.தமிழகத்தை பொறுத்தவரை எப்போதும் இல்லாதது போல திராவிட கட்சிகள் பாணியில் நாளிதழ்களில் பக்கம் பக்கமாக விளம்பரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 70வது பிறந்தால் கண்டுள்ள பிரதமர் மோடி குறித்து சுவாரஸ்ய தகவல் சிலவற்றை பார்ப்போம்.

பள்ளி நாட்களில் சாரணர் இயக்க முகாமில் பங்கேற்றார்

இமயமலை பகுதியில் சுற்றி, புது அனுபவங்களை பெற்றார்.

ராஜ்கோட்டில், 1966ல் ராமகிருஷ்ணா மடத்தின் ஆத்மஸ்தானந்தா சுவாமியை சந்தித்து, துறவியாக விரும்புவதாக கூறினார்

நீண்டநாள் பதவி வகிக்கும் காங்., அல்லாத பிரதமர்.

* குஜராத்தியில் கவிதை எழுதுவார்.
* ஹிந்தியில் கையெழுத்திடுவார்.
* தினமும் யோகாவுடன் காலை பொழுதை துவங்குவார்

* நவராத்திரி பூஜையின் ஒன்பது நாளும் விரதம் இருப்பார்.
* தனிமை விரும்பி. மயில், புறாக்களுடன் பொழுதை கழிப்பார்.
* தினமும் ஐந்து மணி நேரம் துாங்குவார்.


சிறுவயதில் ராணுவத்தில் சேர வேண்டும் என ஆசைப்பட்டார்.

15 வயதில் ரயில் நிலையத்தில் டீ விற்றார்

உடை விஷயத்தில் அதிகம் கவனம் செலுத்துவார் மோடி.

பள்ளி சீருடையை மடித்து, தலையணைக்கு அடியில் வைத்து படுப்பார்.

காலையில் வெண்கல பாத்திரத்தில் வெந்நீர் நிரப்பி, ‘அயர்ன்’ செய்து சுருக்கம் இல்லாமல் அணிவார்.

* 1972, அக். 3: ஆர்.எஸ்.எஸ்.,சில் சேர்ந்தார்.
* 1974, ஜூன் 3: குஜராத்தில், ஊழலுக்கு எதிரான, இளைஞர் நவ்னிர்மன் இயக்கத்தில் சேர்ந்தார்.
* 1985: பா.ஜ.,வில் சேர்ந்தார்.
* 1987, பிப். 3: குஜராத் பிரிவின் பா.ஜ., அமைப்பு செயலரானார்.
* 1989, ஜூன் 3: அத்வானியின் மக்கள் சக்தி யாத்திரையில் பங்கேற்றார்.
* 1995, அக். 3: பா.ஜ., தேசிய செயலரானார்.
* 1998, ஜன. 5: பா.ஜ., தேசிய பொதுச் செயலரானார்.
* 2001, அக். 7: குஜராத் முதல்வராக பதவியேற்றார்.
* 2002, டிச. 1: இரண்டாவது முறையாக குஜராத் முதல்வர்.
* 2007, ஜூன் 1: குஜராத்தின் நீண்ட நாள் முதல்வர். -2,063 நாட்கள்.
* 2007, டிச. 23: குஜராத் முதல்வராக 3வது முறையாக பதவியேற்றார்.
* 2012, டிச. 26: நான்காவது முறையாக குஜராத் முதல்வர்.
* 2013, ஜூன் 9: லோக்சபா தேர்தலுக்கான (2014) பா.ஜ., குழு தலைவர்.
* 2013, செப். 13: பிரதமர் வேட்பாளராக தேர்வானார்.
* 2014, மே 26: பிரதமராக பதவி ஏற்றார்.

‘டுவிட்டரில்’ அதிகம் பேர் பின்பற்றும் உலகத் தலைவர் பட்டியலில், மூன்றாவது இடத்தில் உள்ளார் மோடி


SHARE

Related posts

Leave a Comment