பிரதமர் மோடி வரும் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி தமிழகம் வருகிறார். மெட்ரோ ரெயில் விரிவாக்கம், மற்றும் காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு சில மாதங்களே இருப்பதால், பிரதமர் மோடியின் தமிழக வருகை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலை அதிமுக – பாஜக இணைந்து சந்திக்கும் என பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா நேற்று அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.