லடாக் பகுதிக்கு செல்ல மற்றொரு குகைப் பாதை : பிரதமர் மோடி

SHARE

 லடாக் பகுதிக்கு சென்று வர மற்றொரு குகைப் பாதை அமைக்க வேண்டும் என பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஹிமாச்சல் பிரதேசத்தின் மணாலி -லே நெடுஞ்சாலையில் ரோத்தங் கணவாய்க்கு கீழே மலையைக் குடைந்து எல்லைச் சாலைகள் அமைப்பு 9 கி.மீ., குகைப் பாதை அமைத்துள்ளது.

அந்த குகைப் பாதை திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.நிகழ்ச்சியில் பேசிய மோடி, ‘ சிங்கு லாவில் குகைப் பாதை அமைத்து எந்த கால நிலையிலும் லடாக் பகுதிக்கு செல்ல வசதி ஏற்படுத்த வேண்டும்’ என்றார். நிகழ்சிக்கு பின்னர் இது தொடர்பாக எல்லைச் சாலைகள் அமைப்பின் தலைவர் ஹர்பால் சிங்குடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியாக கூறப்படுகிறது.

இத்திட்டம் இன்னும் மூன்று ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் என ஹர்பல் சிங் அப்போது தெரிவித்துள்ளார். இதனிடையே மணாலி-லே குகைப்பாதை திறப்பு விழாவில் கலந்து கொண்ட மோடி 9.2 கி.மீ., தூர குகைப்பாதையை ஜீப்பில் சென்று ஆங்காங்கே இறங்கி ஆய்வு செய்தார்.


SHARE

Related posts

Leave a Comment