மோடிக்கு கடைசி புகழிடம் காசி,அகிலேஷ் கிண்டல்

SHARE

மோடி கடைசி காலத்தை கழிக்க ஏற்ற இடம் காசி என சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கிண்டலாக விமர்சித்துள்ளார்.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை அடுத்து தற்போது முதல் இந்தியாவின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் களைகட்டத் தொடங்கிவிட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ், சமாஜ்வாடி, பா.ஜ., உள்ளிட்ட மூன்று கட்சிகள் மும்முனைப் போட்டியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் நேற்று (டிச.,13) காலை பிரதமர் மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசியில் காசி விஸ்வநாதர் ஆலயம் திறப்பு விழாவில் பங்கேற்றார். பின்னர் அவர் கங்கை ஆற்றில் நீராடினார்.

இதுகுறித்து உத்தரப்பிரதேசத்தில் பிரசாரம் மேற்கொண்டு வந்த சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், ‘பிரதமர் மோடி உங்களிடமும் என்னிடமும் பொய் கூறலாம், ஆனால் கடவுளிடம் கூற இயலாது’ என விமர்சித்தார்.

பிரதமர் மோடியின் காசி வருகை குறித்து அகிலேஷ் யாதவிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது, ‘மோடி மற்றும் அவரது சக ஆதரவாளர்கள் காசியில் ஒரு மாதம் மட்டும் அல்ல இரண்டு மூன்று மாதங்கள் கூட தங்கலாம். அவர்கள் தங்க ஏற்ற இடம் அது. பொதுவாக ஹிந்துக்கள் தங்களது கடைசி காலத்தை காசியில் கழிக்கவே விரும்புவர்’. இவ்வாறு அகிலேஷ் மறைமுகமாக விமர்சித்திருந்தார். இது தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. இதற்கு பா.ஜ., உறுப்பினர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


SHARE

Related posts

Leave a Comment