வெள்ளை மாளிகையில் வேகமெடுக்கும் கொரோனா

SHARE

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையில் மேலும் பலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் பணியாற்றியும் பெண் உதவியாளர் ஹோப் ஹிக்ஸ்க்கு முதலில் கொரோனா உறுதியானது. அவரைத் தொடர்ந்து, டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், டிரம்பின் குடியரசு கட்சியைச் சேர்ந்த, எம்.பி.,க்களான தோம் டில்லிஸ், மைக் லீ ஆகியோருக்கும் பாதிப்பு உறுதியாகி உள்ளது.
அதிபரின் முன்னாள் ஆலோசகர் கெல்லியானோ கான்வே, பிரசாரக் குழு மேலாளர் பில் ஸ்டீபன், வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் மூன்று பேர் என, பலருக்கும் பாதிப்பு உறுதியாகி உள்ளது.

இவர்கள் அனைவரும், டிரம்புடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் சமீபத்தில் பங்கேற்றவர்கள். மூன்று பத்திரிகையாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகை குறித்து செய்தி சேகரிக்கும் மற்ற பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களுடன் பணியாற்றுவோர் என, பலருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.இதற்கு முன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓபிரையன், துணை அதிபரின் பத்திரிகை தொடர்பு அதிகாரி உட்பட சிலருக்கு தொற்று ஏற்பட்டது.

ஆனால், தற்போதுதான், ஒரே நேரத்தில் பலருக்கும் பாதிப்பு உறுதியாகி உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல், நவ.,3ல் நடக்க உள்ளது. இதற்கான பிரசாரத்தில், டிரம்ப் கடந்த சில நாட்களாக தீவிரமாக ஈடுபட்டிருந்தார். அதனால், பிரசாரத்தில் பங்கேற்றவர்களுக்கும் வைரஸ் பரவியிருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

வைரஸ் உறுதியானதும், வாஷிங்டனின் மேரிலேண்டின் புறநகர் பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு, டிரம்ப் மாற்றப்பட்டார். அவரது மனைவி மெலனியாவுக்கு, வெள்ளை மாளிகையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.’

அதிபருக்கு, ‘ரெம்டெசிவிர்’ மருந்து அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராக உள்ளது’ என, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்..
‘நான் நன்றாக உள்ளேன்’ என, டிரம்பும், சமூக வலை தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.

ஆனால் பாக்ஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த மூத்த ராணுவ அதிகாரி ,கடந்த வெள்ளிக்கிழமை ட்ரம்ப்புக்கு ஆக்சிஜன் அளவும் திடீரென வெகுவாக குறைந்தததாகவும் பின்னர் தீவிர சிகிச்சை மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.


SHARE

Related posts

Leave a Comment