வேலூர் சிறையில் நளினி- முருகன் 4 மாதங்களுக்கு பின் சந்திப்பு

SHARE

ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஏப்ரல் மாதம் சிறையில் கைதிகளை அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டது. அதனால் நளினி-முருகன் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. இருவரும் செல்போனில் வீடியோ கால் மூலம் பேசி வந்தனர்.
கடந்த 16-ந் தேதி முதல் சிறையில் கைதிகளை அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், வக்கீல்கள் நேரில் சந்தித்து பேசி வருகிறார்கள். அதனால் நளினி-முருகன் இருவரும் நேரில் சந்தித்து பேச அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் 4 மாதங்களுக்கு பின்னர் வேலூர் பெண்கள் சிறையில் நேற்று காலை நளினி-முருகன் சந்திப்பு நடைபெற்றது. ஆண்கள் சிறையில் இருந்து முருகனை வேலூர் நில அபகரிப்பு தடுப்புப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் தலைமையிலான போலீசார் பலத்த பாதுகாப்புடன் பெண்கள் சிறைக்கு அழைத்து சென்றனர். அங்குள்ள ஒரு அறையில் காலை 9.15 முதல் 9.45 மணி வரை 30 நிமிடங்கள் நளினியை நேரில் சந்தித்து முருகன் பேசினார். அதன் பின்னர் முருகன் மீண்டும் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.


SHARE

Related posts

Leave a Comment