டில்லியில் 40 பேருக்கு புதிய உருமாறிய கொரோனா

SHARE

இந்தியாவில் புதிய உருமாறிய கொரோனாவால் இதுவரை 29 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதற்கிடையே, டில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 494 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

டில்லியில் இதுவரை உருமாறிய புதிய கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. இவர்கள் 40 பேரும் டில்லியில் உள்ள எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த 40ல் பெரும்பாலானோர் பிரிட்டனில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் .

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், டில்லியில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 0.73 சதவீதமாக உள்ளது. டில்லியில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 500க்கும் குறைவாகவே இருக்கும் என நம்புகிறோம். மருத்துவமனைகளில் 11 ஆயிரம் படுக்கைகள் தற்போது காலியாக உள்ளன. தற்போதைய நிலவரப்படி, 2 ஆயிரம் படுக்கைகள் மட்டும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 40 பேருக்கு புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளன. நோயாளிகள் எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உருமாறிய கொரோனா பாதித்தோருக்கு சிகிச்சையளிக்க 4 தனியார் மருத்துவமனைகளுக்கு அங்கீகாரம் அளித்துள்ளோம். என்றார்.


SHARE

Related posts

Leave a Comment