உருமாறிய கொரோனா வைரஸ் – இந்தியாவில் இல்லை! மத்திய அரசு

SHARE


கொரோனா வைரஸின் புதிய வகை ஒன்று பிரிட்டனில் செப்டம்பரில் கண்டறியப்பட்டது. இது ஏற்கனவே உள்ள வைரஸை காட்டிலும் 70 சதவீதம் வேகமாக பரவக்கூடியது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதனால் இந்தியா உட்பட 25 நாடுகள் பிரிட்டனுக்கு விமானங்களை இயக்க தற்காலிக தடை விதித்துள்ளன. இன்று காலை மத்திய அரசு வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கான வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது. இந்த மாறுபட்ட வைரசுக்கு தடுப்பூசிகள் பயனளிக்காதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், உருமாறிய வைரஸ் ஏற்கனவே மற்ற நாடுகளில் இருக்கலாம் என்று கூறியுள்ளார். இந்த வைரஸ் தனது மரபு குறியீட்டில் 17 குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். உருமாறிய வைரசுக்கு பி.1.1.7 என பெயரிடப்பட்டுள்ளது. இத்தாலி, ஆஸ்திரேலியா, டென்மார்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இது பதிவாகியுள்ளது. தென் ஆப்ரிக்காவில் வேறு வகை உருமாற்றம் பதிவாகியிருக்கிறது.


ஐரோப்பிய யூனியனின் மருந்து ஒழுங்குமுறையாளர் ஃபைசர் தடுப்பூசி புதிய வைரஸிலிருந்து பாதுகாக்கக் கூடும் என்றார். இத்தடுப்பூசியை முதல் நாடாக இங்கிலாந்து தான் அங்கீகரித்தது. தற்போது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் இது பயன்பாட்டில் உள்ளது. இந்தியாவில் விரைவில் இது அவசரகால பயன்பாடிற்கு வரும்.
இந்நிலையில் உருமாற்றமடைந்துள்ள புதிய வைரஸ் இந்தியாவில் இதுவரை காணப்படவில்லை என்று நிடி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் இன்று கூறினார். மேலும் இது நம் நாட்டில் தடுப்பூசிகள் உருவாக்கப்படுவதில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றார். முன்னதாக இது பற்றி பேசிய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன், அரசு முழு எச்சரிக்கையுடன் இருப்பதாகவும், கற்பனை சூழல்களை எண்ணி பதற்றமடைய வேண்டாம் என தெரிவித்தார்.


SHARE

Related posts

Leave a Comment