அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடிய சூழல் நிலவுகிறது.இது மேற்று வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கைக்கும் தென்தமிழகத்திற்கு இடையே கரையை கடக்கும் வாய்ப்புள்ளது. என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஒரே மாதத்தில் மூன்றாவது முறையாக வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. நவம்பர். 30 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இதனால், டிச.1 முதல் 3 வரை தமிழகத்தில் பரவலாக மழை இருக்கும்.
தமிழ்நாட்டில், பரவலாக, நவம்பர்.24, 25, 26 ஆம் தேதிகளில் கன மழை வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.