7,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெண்ணின் டி.என்.ஏ.,வில் புதிய மனித மரபணு கண்டுபிடிப்பு

SHARE

இந்தோனேசியாவில் 7,000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த பெண்ணின் எலும்புகளிலிருந்து, புதிய மனித மரபணுவை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தோனேசியா மற்றும் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் ஒன்றிணைந்து தெற்கு சுலாவேசி என்ற பகுதியில் 2015ம் ஆண்டு முதல் நடத்திய அகழாய்வுகளின் முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளனர்.

தெற்கு சுலாவேசி பகுதியின் முதல் நாகரிகமாக டோலியன் மக்கள் கருதப்படுகின்றனர். தெற்கு சுலாவேசியில் சுண்ணாம்பு குகையில் கண்டெடுக்கப்பட்ட 17 அல்லது 18 வயது இளம் பெண்ணின் எலும்புகள் ஒப்பீட்டளவில் சேதமாகாமல் இருந்தது.

வேட்டையாடி வாழ்ந்த அப்பெண்ணின் சடலம், வயிற்றுக்குள் குழந்தை படுத்திருப்பது போன்ற நிலையில் புதைக்கப்பட்டு இருந்தது.

பெண்ணின் எலும்புகளிலிருந்து புதிய மனித மரபணு கண்டறியப்பட்டு உள்ளது. உலகில் வேறு எந்த பகுதிகளிலும் கண்டுபிடிக்கப்படாத இந்த மனித மரபணு, தனித்துவமானது. ஈரப்பதமான வெப்ப மண்டல வானிலையில் டிஎன்ஏக்கள் எளிதாக அழுகிவிடும். பண்டைய கால மனிதர்களின் டிஎன்ஏ கண்டுபிடிப்பது அரிதான ஒன்று. எனவேதான், இதை மிகவும் அதிர்ஷ்டமான கண்டுபிடிப்பாக கருதுகிறோம்.என ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்‘.


SHARE

Related posts

Leave a Comment