“ஒரே நாடு ஒரே சட்டம்” – குழு அமைத்தது இலங்கை அரசு

SHARE

இலங்கை அதிபராக இருக்கும் கோத்தபய ராஜபக்சே தனது தேர்தல் பிரசாரத்தின் போது  நாட்டில் ஒரே நாடு ஒரே சட்டம் கொண்டு வரப்படும் என வாக்குறுதியளிததார். 2019- ஆம் ஆண்டு அதிபராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஒரே நாடு ஒரே சட்டம்  அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் கோத்தபய முனைப்பு காட்டி வருகிறார். 
அந்த வகையில்,  சட்டத்திறகான வரைவு  தயாரிக்க 13- பேர் கொண்ட குழுவை இலங்கை அரசு அமைத்துள்ளது. இந்தக்குழுவின் தலைவராக  பவுத்த துறவி ஞானசேரா நியமிக்கப்பட்டுள்ளார். 
முஸ்லீம்களுக்கு எதிராக கடுமையான நிலைப்பாடு கொண்டவராக அறியப்படும் ஞானசேரா குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
13 பேர் கொண்ட குழுவில் முஸ்லீம்கள் 4 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழுவில் தமிழர்கள் யாரும் இடம் பெறவில்லை. 2022- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு முன்பாக  ஒரே நாடு ஒரே சட்டம் குறித்த வரைவு அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என வரைவு குழுவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 


SHARE

Related posts

Leave a Comment