சீனாவை எதிர்கொள்ள ஆஸ்திரேலியா-பிரிட்டன்-அமெரிக்கா பாதுகாப்பு ஒப்பந்தம் நிறைவேற்றம்

SHARE

இந்தோபசிபிக் பகுதியில் அமைதி நிலவ பிரிட்டன் அரசு தற்போது ஆஸ்திரேலியாவுடன் போர் ஒப்பந்தம் செய்துள்ளது.

அணு ஆயுதத்தை தாங்கிய நீர்மூழ்கிக் கப்பல்கள் முக்கிய போர் ஆயுதங்களாக பயன்படுத்தப் படுகின்றன. இரு நாட்டுக் கப்பற்படைகளுக்கு இடையே போர் நடைபெறும்போது கடலுக்கு அடியில் உள்ள நீர்மூழ்கி போர் கப்பலில் இருந்து இலக்கை துல்லியமாகத் தாக்க அதில் அணு ஆயுதம் பொருத்தப்படுகிறது.

உலகின் அமைதிக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் இந்த அணுவாயுத போர்க்கப்பல் அவ்வப்போது சிறிய நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது அமெரிக்கா-ஆஸ்திரேலியா-பிரிட்டன் ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையே உருவாக்கப்படும் பாதுகாப்பு ஒப்பந்தம் இந்தோ பசிபிக் பகுதியில் அமைதியை ஏற்படுத்த தவிர மற்ற நாடுகளை அச்சுறுத்த அல்ல என பிரிட்டன் நாடாளுமன்ற கூட்டத்தில் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய யூனியனிலிருந்து கடந்த ஜனவரி மாதம் பிரிட்டன் முழுவதுமாக வெளியேறியதை அடுத்து ஆசிய நாடுகளுடன் இன்னும் இணக்கமான வர்த்தகத் தொடர்பை ஏற்படுத்த போரிஸ் ஜான்சன் திட்டமிட்டுள்ளார். இதன் முதல்படியாக தற்போது இந்த ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ஸ்காட் மோரிசன் ஆகியோருடன் போரிஸ் ஜான்சன் விவரித்துள்ளார். இந்த ஒப்பந்தத்திற்கு ஆகஸ்(AKUS) என்று பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்தில் சீனா தனது ராணுவ பலத்தை அதிகரித்து வந்ததை அடுத்து அமெரிக்கா-பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் அச்சுறுத்தலுக்குள்ளாகின. இந்த அணு நீர்மூழ்கி கப்பல் ஒப்பந்தம் மூலமாக சீனாவால் அச்சுறுத்தப்பட்ட இந்த நாடுகள் சீனாவை எதிர்கொள்ளத் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.


SHARE

Related posts

Leave a Comment