பல மாதங்களாக இந்தியாவில் இருந்து தலைமறைவாக சென்ற நித்யானந்தா தனக்கென ஒரு நாட்டை கட்டமைத்து வருவதாக வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.
சமீபத்தில் அவருடைய நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை என்ற அறிவிப்பை வெளியிட்டார். தனது நாட்டிற்கென புதிய சட்டதிட்டங்களை உருக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
அதே போல இரண்டு விதமான பணத்தை அச்சிட முடிவு செய்திருப்பதாகவும் அவர் அறிவித்தார். வெளிநாட்டு புழக்கத்திற்கு ஒன்றும் உள் நாட்டு புழக்கத்திற்கு ஒன்றும் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது நித்யானந்தாவின் கைலாசா நாட்டு பணம் என ரூபாய் நோட்டு ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நோட்டு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சடப்பட்டுள்ளது