சில மாதங்களுக்கு முன் சீனாவில் மீண்டும் சில மாகாணங்களில் கோவிட் பரவல் ஏற்பட்டது. கடந்த ஜூலை மாதம் நஞ்சீங் என்ற மாகாணத்தில் 20 விமான நிலைய ஊழியர்களிடம் வைரஸ் தாக்கம் இருப்பது கண்டயறிப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 1,200 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தீவிரமாக கோவிட் ஒழிப்பு பணிகளை சீன சுகாதாரத்துறை மேற்கொண்டது.
தொற்று பாதித்த ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்தியதன் மூலம் மிக விரைவில் கோவிட் பரவலை சீன சுகாதாரத்துறை கட்டுப்படுத்தி உள்ளது. இன்று காலை நிலவரப்படி, புதிதாக ஒருவருக்கு கூட கோவிட் பரவல் ஏற்படவில்லை. நேற்று வரையிலான நிலவரப்படி சீனாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 94 ஆயிரத்து 652 ஆகும். பலியானவர்களின் எண்ணிக்கை 4,636 ஆக உள்ளது’ என, சீன சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.