பாதிக்கப்பட்ட குடும்பத்தின் குரலை எந்த சக்தியும் அடக்க முடியாது- ராகுல்.

SHARE

உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை ராகுல் , பிரியங்கா ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.  கே.சி.வேணுகோபால், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, முகுல் வாஸ்னிக் ஆகியோர் ராகுல்காந்தியுடன் உடன் இருந்தனர்.

ஹத்ராஸ் சென்று பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்த பின் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி செய்தியாளர்களிடம் பேசும் போது

தங்களது மகளை கடைசியாக ஒருமுறை பார்க்கும் வாய்ப்பு கூட குடும்பத்தினருக்கு வழங்கப்படவில்லை. ஹத்ராஸ் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதி கிடைக்கும் வரை நாங்கள் போராடுவோம். முதலமைச்சர் ஆதித்யநாத் தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றார்.

அதனைதொடர்ந்து ராகுல்காந்தி ஆவேசமாக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தின் குரலை உலகின் எந்த சக்தியும் அடக்க முடியாது என்றார்.


SHARE

Related posts

Leave a Comment