டுவிட்டருக்கு மத்திய அரசு நோட்டீஸ்

SHARE

லடாக்கின் லே பகுதியை, ஜம்மு – காஷ்மீருடன் இணைத்து காட்சிப்படுத்திய, ‘டுவிட்டர்’ நிர்வாகத்திற்கு, விளக்கம் அளிக்கும்படி, மத்திய அரசு, ‘நோட்டீஸ்’ அனுப்பியுள்ளது.

கடந்த ஆகஸ்டில், ஜம்மு – காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, மாநிலத்தை, ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.அந்த இரண்டு பிராந்தியங்களும், தனித்தனி யூனியன் பிரதேசங்களாகவே கருதப்படுகின்றன.

இந்நிலையில், சமூக வலைதளமான டுவிட்டர், லடாக்கின் லே பகுதியை, ஜம்மு – காஷ்மீருடன் இணைத்து காட்டும் வரைபடத்தை காட்சிபடுத்தியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம், டுவிட்டர் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது.


SHARE

Related posts

Leave a Comment