ஜோ பிடன், கமலா ஹாரிஸ்-க்கு ஆதரவாக பிரசாரம் -ஒபாமா முடிவு

SHARE

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட முன்னாள் அதிபர் ஒபாமா முடிவு செய்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ம் தேதி நடக்கிறது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக டொனால்ட் டிரம்பும், துணை அதிபராக மைக் பென்சும் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு எதிராக ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக ஜோ பிடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர். தேர்தல் நெருங்கி வருவதால் இரு கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கருத்துக்கணிப்பு முடிவுகளும் டிரம்பை விட பிடனுக்கு தான் அதிக மக்கள் ஆதரவு இருப்பதாக தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாக முன்னாள் அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். பென்சில்வேனியாவில் நடைபெறவுள்ள பிரசாரக் கூட்டத்தில் ஜோ பிடனுக்காக அவர் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒருவர் மற்றொரு வேட்பாளருக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.


SHARE

Related posts

Leave a Comment