பழனியில் இரண்டு பேரை துப்பாக்கியால் சுட்ட முதியவர்-நேரடி காட்சிகள்

SHARE

பழனியில் இடத்தகராறு காரணமாக தியேட்டர் அதிபர் ஒருவர் இரண்டு நபர்களை துப்பாக்கியால் சுட்டத்தில் ஒருவர் உயிரிழந்தார் மற்றொருவர் மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள அக்கரைப்பட்டியை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 60). விவசாயி. பழனி ரெயில்வே பீடர் ரோடு, அப்பர் தெருவை சேர்ந்தவர் நடராஜன் (80). தியேட்டர் அதிபர். இவர்களுக்கிடையே பழனி பீடர் ரோட்டில் உள்ள 12½ சென்ட் நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்தநிலையில் அந்த நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்கான முயற்சியில் இளங்கோவன் ஈடுபட்டார். இதற்காக அவரது தரப்பினர், அந்த நிலத்தை சுத்தப்படுத்தும் பணியில் நேற்று காலை 10.15 மணி அளவில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நடராஜன், தனது துப்பாக்கியை இடுப்பில் மறைத்து வைத்தபடி அங்கு சென்றார். பின்னர் அங்கிருந்த இளங்கோவனின் உறவினர்களிடம், இது தொடர்பாக கேட்டார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நடராஜன், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் திடீரென சுப்பிரமணியையும், பழனிசாமியையும் அடுத்தடுத்து சுட்டார்.

துப்பாக்கி சூட்டில் பழனிசாமிக்கு வலதுபுற தொடையிலும், சுப்பிரமணிக்கு வயிற்று பகுதியிலும் குண்டு பாய்ந்தது. படுகாயம் அடைந்த 2 பேரும் சாலையில் மயங்கி விழுந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பழனிசாமி தொடையில் பாய்ந்த துப்பாக்கி குண்டை டாக்டர்கள் அகற்றினர்.

சுப்பிரமணி மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் அவர் சிகிச்சை பலனனிக்காமல் உயிரிழந்தார்.


SHARE

Related posts

Leave a Comment