‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை செயல்படுத்த, தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது,” என, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார்.
”தேவையான சட்ட திருத்தங்கள் செய்யப்பட்டால், இது சாத்தியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் சட்டசபை தேர்தல், இடைத்தேர்தல் என, ஆண்டுதோறும் தேர்தல் நடந்துக் கொண்டேயிருக்கின்றன. பிரதமர் மோடி, சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘அடிக்கடி தேர்தல்கள் நடப்பதால், நாட்டின் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கின்றன. இதனால் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த, மத்திய அரசு விரும்புகிறது’ என்றார்.
இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்: ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற பிரதமரின் திட்டத்தை, தேர்தல் ஆணையம் ஏற்கிறது. தேவையான சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால், இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தவும், தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது.