சமையல் காஸ், சமையல் எண்ணெய், பெட்ரோல்,டீசல் விலை உயர்வை குறைப்பது உள்ளிட்ட 11ம் அம்ச கோரிக்கைகளை வலியுத்தி செப்.,20 முதல் செப்.,30 வரையில் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்த எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
இது தொடர்பாக எதிர்கட்சிகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் , காங்கிரஸ் கட்சிதலைவர் சோனியா தலைமையில் 19 எதிர்கட்சிகள் ஆலோசனை நடத்தின. இந்த கூட்டத்தில் வரும் 2024 ம் ஆண்டில் நடைபெற உள்ள தேர்தலைதிட்டமிடுவதற்கான நேரம் நெருங்கி விட்டது எனவும் தேர்தலை ஒருங்கிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டடது.
தொடர்ந்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் வரும் செப்டெம்பர் 20ம் தேதி முதல் 30 ம் தேதி வரையில் 11 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மேலும் காஷ்மீரில் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் வெளிப்படைத்தன்மையுடன் தேர்தலை நடத்த வேண்டும்.
சமையல் காஸ், சமையல் எண்ணெய், பெட்ரோல்,டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும்.
கொரோனா தடுப்பூசி திட்டத்தை நாடு முழுவதும் விரைந்து செயல்படுத்த வேண்டும்.
மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்து குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய வேண்டும்.
பள்ளிகளை திறக்க உள்ளதால் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
பெகாசஸ் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும். என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.