வழு பெற்றது எதிரணி – பீகார் தேர்தல் களத்தில் துவங்கியது பரபரப்பு

SHARE

பீஹார் சட்டசபை தேர்தலில், எதிர்க்கட்சிகளின், ‘மெகா’ கூட்டணிக்கு, ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில், சட்டசபை தேர்தல், மூன்று கட்டங்களாக நடக்கவுள்ளது. இந்த தேர்தலில், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையில், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் உட்பட பல கட்சிகள் இணைந்து, மெகா கூட்டணி அமைத்துள்ளன.இந்த கூட்டணியின் தொகுதி பங்கீடு குறித்த பேச்சில், இழுபறி நீடித்து வந்தது.

இந்நிலையில், நேற்று, தொகுதி பங்கீடு பேச்சு சுமூகமாக முடிந்தது. மொத்தம் உள்ள, 243 தொகுதிகளில், ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு, 144 தொகுதிகளும், காங்கிரசுக்கு, 70 தொகுதிகளும், மற்ற கட்சிகளுக்கு இதர தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இடைத்தேர்தல் நடக்க உள்ள வால்மீகி நகர் லோக்சபா தொகுதியிலும், காங்கிரஸ் போட்டியிட உள்ளது.மெகா கூட்டணியின் தலைவராக, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலுவின் மகனும், முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


SHARE

Related posts

Leave a Comment