ஒ.பி.எஸ்.தனது ஆதரவாளர்களுடன் திடீர் ஆலோசனை அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு

SHARE

சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனான கூட்டம் முதலமைச்சர் எடபாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்று வரும் நிலையில், அதில் பங்கேற்காத துணை முதலமைச்சர் ஒ.பி.எஸ் தனது ஆதரவாளர்களுடன் தனியே ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இன்று காலை 10 மணியளவில் துணை முதலமைச்சர் ஒ.பி.எஸ் இல்லத்தில் இந்த ஆலேசானை நடைபெற்று வருகிறது. இதில் கட்சியின் மூத்த தலைவர் கே.பி.முனுசாமி ,மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நேற்று நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தி தன்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்காத நிலையில் ஒ,பி,எஸ் அதிருப்தியில் இருந்தார். இந்த நிலையில் தலைமை செயலகத்தில் கொரானா குறித்த முக்கியமான ஆலோசனை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் அதில் பங்கேற்காமல் தனியே அவர் ஆலோசனை நடத்தி வருவது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


SHARE

Related posts

Leave a Comment