41ல் 8 ஜெயிச்சா எப்படி சீட் கொடுப்பார்கள்? ப.சிதம்பரம் விரக்தி பேச்சு

SHARE

கூட்டணியில், 41 சீட் வாங்கி, எட்டில் மட்டும் ஜெயித்தால் எப்படி சீட் கொடுப்பார்கள் என, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது கட்சிக்காரர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்..

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூரில், காங்கிரஸ் வடக்கு வட்டார பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் பேசிய ப.சிதம்பரம் காங்கிரஸ்கட்சியில், டில்லியாக இருந்தாலும் சரி, கிராமமாக இருந்தாலும் சரி, இளைஞர்களுக்கு பதவி கொடுக்க வேண்டும். மூத்தவர்கள் வழிகாட்ட வேண்டும். மற்ற கட்சிகள் பிரசாரம் துவங்கி விட்ட நிலையில், நாம் இன்னும், ‘பூத் கமிட்டி’ நிலையிலேயே உள்ளோம். நம் கட்சியின் பலம் மாற்றுக் கட்சிக்கு கூட தெரிகிறது.

பூத் கமிட்டிக்கே ஆள் குறைவாக இருந்தால், கூட்டணி கட்சிகள் எப்படி மதிப்பர். கூட்டணியில் கடந்த முறை, 41 சீட் வாங்கி, எட்டில் மட்டுமே வெற்றி பெற்றோம். எப்படி நம்மை மதித்து சீட் கொடுப்பர்?

கட்சி நிர்வாகிகள், கட்சி கூட்டங்களை அடிக்கடி நடத்த வேண்டும், கட்சி பற்றுடன் இருக்க வேண்டும். காங்கிரசார், முதலில் தங்கள் வீட்டு பையன்களை கட்சியில் சேர்க்க வேண்டும். அவர்கள் மூலம் மற்ற இளைஞர்களையும் சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கேட்டுக்கொண்டார்.


SHARE

Related posts

Leave a Comment