தடுப்பூசி பெருமை விஞ்ஞானிகளையே சேர வேண்டும்: ப.சிதம்பரம்

SHARE

கொரோனா போரில் நாம் வெற்றிக் கண்டால் அந்த பெருமை விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வாளர்களையே சேர வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்திருப்பது பிரதமர் மோடி தலைமைக்கு கிடைத்திருக்கும் பெருமை என பா.ஜ.,வினர் பாராட்டி வருகின்றனர். இது வரலாற்றுச் சாதனை என்ற அமித்ஷா, அது பற்றி ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்வதாக கூறியிருந்தார். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், மோடியின் தலைமையின் கீழ் ஒவ்வொரு இந்தியரும் முக்கியமான கட்டத்தை கடந்திருப்பதாக குறிப்பிட்டார்.

இந்நிலையில் தடுப்பூசிக்கான வெற்றி முழுக்க முழுக்க இந்தியா உள்ளிட்ட உலக விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வாளர்களையே சேரும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது பற்றி டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள திவில் ‛மார்ச் 24 அன்று பிரதமர் மோடி 21 நாள் ஊரடங்கை அறிவித்தார். கொரோனா சவாலை 18 நாள் மகாபாரத போருடன் ஒப்பிட்டு, இந்த போரை 21 நாட்களில் வெல்வோம் என்றார். அந்த நேரத்தில், அவர் அறிவியலிலோ அல்லது தடுப்பூசி உருவாக்கத்திலோ நம்பிக்கை வைக்கவில்லை. கொரோனாவுக்கு எதிரான போரை தடுப்பூசிகள் தான் வெல்லும். அரசாங்கமோ அல்லது புராண நம்பிக்கைகளோ அல்ல.

நாம் இந்த போரில் வெற்றி கண்டால் ஒட்டுமொத்த பெருமையும் இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகளுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் செல்ல வேண்டும். நமது விஞ்ஞானிகளுக்கு வணக்கம் செலுத்துவதோடு, அறிவியலை மேம்படுத்துவதற்கும் விஞ்ஞான மனநிலையை வளர்ப்பதற்கும் உறுதியேற்போம்.’ என கூறிப்பிட்டுள்ளார்.


SHARE

Related posts

Leave a Comment