இலங்கை போன்ற நாடுகளில் பொருளாதாரம் சரிந்தால், இந்தியாவிலும் பாதிப்பு ஏற்படும்,” என, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார்.
காரைக்குடியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பா,சிதம்பரம், சிவகங்கைக்கு வேளாண் மற்றும் சட்டக் கல்லுாரி அறிவித்ததை வரவேற்ப்பதாக தெரிவித்தார். கண்டனுாரில் கதர் கிராம தொழில் மையத்தை சீரமைத்து தருவதால் வேலைவாய்ப்பு கிடைக்கும். அழகப்பா பல்கலைக்கு துணைவேந்தர் நியமிக்க வேண்டும்.கொரோனா காலத்தில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறப்பு இல்லை என மத்திய அரசு தெரிவிக்கிறது.
தமிழகத்தில் சில நாட்கள் மட்டுமே பற்றாக்குறை தெரிந்தது. வடமாநிலங்களில் அதிகளவில் பற்றாக்குறை இருந்தது என குறிப்பிட்டார்.
இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பொருளாதாரம் சரிந்தால், இந்திய பொருளாதாரமும் பாதிக்கும் என கூறிய சிதம்பரம். தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., — காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்றார். மத்தியில் ஆட்சி மாறினால் தான் பெட்ரோல், டீசல் விலை குறையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.